Pages

தொடர்புக்கு

தொடர்புக்கு: 72000 72070, #6/4, கன்னிகாபரமேஸ்வரி எக்ஸ்டென்சன் - 2, அமலா பள்ளி சாலை, கோபிசெட்டிபாளையம் - 638452, ஈரோடு மாவட்டம்

அறிமுகம்

வணக்கம் . . . .

சமைக்க தெரிந்தவர்களுக்கும், சமைக்க தெரியாதவர்களுக்கும், சமையலறை பக்கமே செல்லாதவர்களுக்கும், சமையலறையிலேயே காலத்தை வீணாக்குபவர்களுக்கும், நன்றாக சமைப்பவர்களுகும், சமையல் செய்ய பழகிக்கொண்டு இருபவர்களுக்கும் சமையல் பற்றிய ஒரு புதிய பரிணாமத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமை அடைகிறது உங்கள் யுவா கிச்சன்.

நாம் மேலே பார்த்த அனைத்து வகை மக்களுக்கும் மேலும் இதில் இடம் பெறாத மக்களுக்கும் பிடித்த செயல், தெரிந்த விஷயம்  சாப்பிடுவது. ஆனால் இதில் எதாவது குறை ஏற்ப்பட்டால் எல்லா வகையினருக்கும் கோபம் வந்து விடும். ஆனால் நமக்கு தேவையான நேரத்தில் அனைத்தும் சரியான அளவில் கலந்து சுவையுடன் கிடைத்தால் எப்படி இருக்கும். சமையலில் ஒரு புதிய தீர்வை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

சமையல் செய்வதில் இருக்கும் பெரிய சிக்கல் நேரம் இது சமைக்க தெரிந்தவர்களுக்கு, சமைக்க தெரியாதவர்களுக்கு எப்படி செய்வது, எவ்வளவு அளவு உப்பு, காரம், தண்ணீர், இனிப்பு சேர்ப்பது என்பதை தவிர சமைப்பதில் வேறு எந்த பிரச்சனையும்  இருப்பதாக தெரியவில்லை இந்த நேரம், அளவு இப்படி பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்தால் எப்படி இருக்கும் என்று தோன்றுகிறதா! அப்படி ஒரு தீர்வு உங்களுக்கு இங்கு கிடைக்க போகிறது.

பொதுவாக நமக்கு  இட்லி சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது, நாம் என்ன செய்வோம் காலையில் அரிசி, உளுந்தம் பருப்பு, மற்றும் வெந்தயம் என அனைத்தையும் 8 மணி நேரம் ஊற வைத்து  பின்பு அறைத்து, 12 மணி நேரம் கழித்து வேக வைத்தால் தான் ஆரோக்கியமான  இட்லி தயார் ஆகும். இருந்தாலும் உடனடியாக வேண்டும் என்றால் எந்த ஹோட்டலுக்கு செல்லலாம் என்று தோன்றும், ஆனால்  நாமோ நடுத்தர வர்க்கத்தை சேர்த்தவர்கள் அப்படி ஆசைப்படும் போது நாம் ஹோட்டலுக்கு சென்றால் நமது பட்ஜெட்டில் துண்டு விழும். பொறுமை பொறுமை உடனடி இட்லி மாவு இருக்குனு  நீங்கள் சொல்றது எனக்கு கேட்குது..... ஆனா அதுல இருக்குற பின் விளைவுகள் இதோ உங்கள் கவனத்திற்கு அதன்  தயாரிப்பு முறை, அதன் மூலப்பொருள், பதப்படுத்தும் முறை என அனைத்திலும் குறை இருக்கும் போதிலும் அதை வாங்க நாம் மறுபதில்லை காரணம் உடனடியாக கிடைப்பது அது மட்டும் என்பதாலே. இதில் நமக்கு பணம் விரையம் ஆன போதிலும் முழுமையான திருப்தி கிடைப்பது இல்லை. மேலும் அந்த தரமில்லாத தயாரிப்புகளால் உடல் நல குறைவும் வருகிறது. இந்த வகையான பிரச்சனைகளுக்கு தீர்வு அளித்து உங்கள் பணம், நேரம் இவற்றை சேமித்தும், உங்களது  ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வாய்ப்பு அளிப்பதில் பெருமை அடைகிறது
யுவா கிச்சன்.

மேலும் நமக்கு தெரிந்த வகையில் அனைத்து வகை உணவிலும் கலப்படம், பதப்படுத்தி (PRESERVATIVES) சேர்க்கும் முறை, செயற்கை வண்ணங்கள், அஜினோமோட்டோ (MSG - Mono Sodium Glutamate) என அனைத்திலும் தரம் குறைவு. இந்த அனைத்தில் இருந்தும் மாறுபட்ட தனித்தரம் வாய்ந்த ஒரு உடனடி உணவு வகை உள்ளது. அதன் தனி சிறப்புகள் இதோ உங்களுக்காக,
  • 100 சதவிகிதம் இயற்கை முறை (100% Natural)
  • 100 சதவிகிதம் வெஜிடேரியன் (100% Vegetarian)
  • பதப்படுத்தி இல்லை (No Preservative)
  • செயற்கை வண்ணம் இல்லை (No Artificial Colors)
  • செயற்கை சுவை இல்லை (No Artificial Flavor)
  • சுவை தூக்கி இல்லை (No Enhancers)
  • அஜினோமோட்டோ இல்லை (No MSG - Mono Sodium Glutamate)
இந்த அனைத்தும் தாண்டி விலை குறைவு, நேரம் சேமிப்பு.... விலை மதிப்பு இல்லாத நமது ஆரோக்கியத்தை குறைக்காமல் இருக்கும் இந்த உடனடி உணவின் விலை மற்றும் வகைகள் பற்றி அடுத்த பகுதியில் பார்போம்.

உடனடி உணவின் வகைகள்

இவை அனைத்தும் தயார் நிலையில் உள்ள உடனடி உணவு வகைகள். இவை அனைத்திற்கும் சேர்க்க வேண்டிய பொருட்கள் என பார்த்தால் தண்ணீர், பால் மற்றும் தயிர் இந்த மூன்று மட்டும் தான். வேறு எந்த பொருளையும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. 

1. உடுப்பி ருச்சி  (UDUPI RUCHI)



2. டெம்ப்டாஸ் (TEMPTAS)


3. நியூட்ராமைன்  (NUTRAMINE)



அடுத்து வரும் பகுதியில் ஒவ்வொன்றும் எப்படி செய்ய வேண்டும், எவ்வளவு நேரம் ஆகும் மேலும் எவ்வளவு பணம் செலவாகும் என்பதை பற்றி பார்ப்போம்.

சேமியா கீர் (சேமியா பாயாசம்)

முதலில் இனிப்புடன் துவங்குவோம் சேமியா கீர் (சேமியா பாயாசம்). நம் வீட்டில் எதாவது விஷேசம் என்றால் நாம் முதலில் செய்ய நினைப்பது இனிப்பு அதுவும் பாலுடன் கலந்து செய்தால் இன்னும் மகிழ்ச்சி. அப்படி யோசித்தால் நாம் நினைவுக்கு வருவது பாயாசம் அதுவும் பால் பாயாசம். அப்படிப்பட்ட ஒரு இனிப்பு வகையான பாயாசம் 10-12 நிமிடத்தில் தயார்.


இந்த பாக்கெட்டில் உள்ள பொருட்கள்:

  • சர்க்கரை (SUGAR)
  • சேமியா (VERMICELLI)
  • நெய் (GHEE)
  • முந்திரி (CASHEW NUT)
  • திராட்சை (RAISINS)
  • ஏலக்காய் (CARDAMOM POWDER)
  • பால் பவுடர் (MILK SOLIDS)
  • குங்குமப்பூ (NATURAL SAFFRON)

தேவையான பொருட்கள்:

பால் 1 லிட்டர் மட்டும் 

செய்முறை:

  1. 1 லிட்டர் பாலை கொதிக்க விட வேண்டும்.
  2. இந்த பாக்கெட்டில் உள்ளவற்றை கொதிக்கும் பாலில் நிதானமாக சேர்க்கவும்.
  3. நன்கு கலந்து குறைந்த தீயில் (LOW FLAME) 10-12 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  4. சூடாக பரிமாறவும்.

ரவா தோசை (RAWA DOSAI)

நாம் ஹோட்டலுக்கு சென்றால் பொதுவாக ஆர்டர் செய்வது சற்று வித்தியாசமான உணவு தான் அதிலும் தோசை வகையில் ரவா தோசை, மசாலா தோசை போன்ற வகைதான். ஆனால் இவற்றின் விலை நம்மை அதை பற்றி யோசிக்க கூட விடாத நிலையில், நாம் ரவா தோசையை நமது வீட்டிலேயே அதுவும் நமது பட்ஜெட்டிலேயே சாப்பிடும் ஒரு அற்புதமான ஆரோக்கியமான உடனடி உடுப்பி ருச்சி ரவா தோசை மிக்ஸ்.



இந்த பாக்கெட்டில் உள்ள பொருட்கள்:

  • கூழுக்கு பயன்படும் அரைத்த கோதுமை (SEMOLINA)
  • அரிசி மாவு (RICE FLOUR)
  • கோதுமை மாவு (WHEAT FLOUR)
  • உப்பு (SALT)
  • சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் (REFINED SUNFLOWER OIL)
  • சீரகம் (CUMIN)
  • பச்சை மிளகாய் (DEHYDRATED GREEN CHILLI) 
  • பெருங்காயம் (ASFOETIDA)

தேவையான பொருட்கள்:

தண்ணீர் 1.2 (1200 ml) லிட்டர் மட்டும்.

செய்முறை:

  1. இந்த பாக்கெட்டில் உள்ளவற்றை 1.2 லிட்டர் தண்ணீரில் ஒரே சீராக கலக்கவும்.
  2. கரைத்த மாவை 5 நிமிடங்கள் அப்படியே விடவும்.
  3. சூடான தவாவில் எண்ணைய் தடவி, ஒரு சிறிய கப் மாவை எடுத்து தவா மீது வார்க்கவும்.
  4. ஒரு ஸ்பூன் நெய் அல்லது எண்ணையை ஊற்றிய மாவின் மீதும் அதை சுற்றியும் விடவும்.
  5. பொன்னிறமாக மாறும் வரை மிதமான தீயில் வேக விடவும்.
  6. பின்பு  மேலே கூறியவற்றை மீண்டும் செய்யவும்.

உங்களது பணம், நேரம் இவற்றை சேமித்து, ஆரோக்கியத்தை பெற்று சட்டினியுடன் அன்பையும் கலந்து பரிமாறவும். 

ரவா உப்புமா

பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்காத ஒன்று ரவா உப்புமா. காரணம் மீண்டும் மீண்டும் வீட்டில் அதை செய்வதுதான். ஆனால் இதன் சுவையை கூட்டி, ஆரோக்கியமான முறையில் கிடைத்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு தனித்தன்மை வாய்ந்த சுவையுடனும், முற்றிலும் இயற்கையான முறையிலும், பதப்படுத்தியை சேர்க்காமலும் மேலும் செயற்கை சுவையும், செயற்கை வண்ணங்கள் சேர்க்காமல் கிடைக்கும் ஒரு உடனடி வகைதான் இந்த உடுப்பி ருச்சி ரவா உப்புமா. இதன் சுவை அனைவரையும் மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும்.




இந்த பாக்கெட்டில் உள்ள பொருட்கள்:

  • கூழுக்கு பயன்படும் அரைத்த கோதுமை (SEMOLINA 82%)
  • சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் (REFINED SUNFLOWER OIL)
  • கடலை பருப்பு (BENGAL GRAM) 
  • கடுகு (MUSTARD)
  • உளுத்தம் பருப்பு (BLACK LENTIL)
  • வெங்காயம் (DEHYDRATED ONION BITS)
  • பச்சை மிளகாய் (DEHYDRATED GREEN CHILLI)
  • இஞ்சி (DEHYDRATED GINGER BITS )
  • கருவேப்பிலை (DEHYDRATED CURRY LEAVES)
  • மஞ்சள் தூள் (TURMERIC POWDER)
  • சர்க்கரை (SUGAR)
  • உப்பு (SALT)

தேவையான பொருட்கள்:

  • தண்ணீர் 400 மில்லி (400 ML)
  • நெய் அல்லது எண்ணெய் 4 ஸ்பூன் 

செய்முறை:

  1. 400 மில்லி தண்ணீரை 4 ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  2. கொதிக்கும் நீரில் இந்த பாக்கெட்டில் உள்ளவற்றை மெதுவாக சேர்க்கவும்.
  3. நன்கு கலந்து 3-5 நிமிடங்கள் வேகவிடவும். சில நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.
உங்களது பணம், நேரம் இவற்றை சேமித்து, ஆரோக்கியத்தை பெற்று சட்டினியுடன் அன்பையும் கலந்து தனித்தன்மை சுவை வாய்ந்த உடுப்பி ருச்சி ரவா உப்புமாவை பரிமாறவும்.