நாம் ஹோட்டலுக்கு சென்றால் பொதுவாக ஆர்டர் செய்வது சற்று வித்தியாசமான உணவு தான் அதிலும் தோசை வகையில் ரவா தோசை, மசாலா தோசை போன்ற வகைதான். ஆனால் இவற்றின் விலை நம்மை அதை பற்றி யோசிக்க கூட விடாத நிலையில், நாம் ரவா தோசையை நமது வீட்டிலேயே அதுவும் நமது பட்ஜெட்டிலேயே சாப்பிடும் ஒரு அற்புதமான ஆரோக்கியமான உடனடி உடுப்பி ருச்சி ரவா தோசை மிக்ஸ்.
இந்த பாக்கெட்டில் உள்ள பொருட்கள்:
- கூழுக்கு பயன்படும் அரைத்த கோதுமை (SEMOLINA)
- அரிசி மாவு (RICE FLOUR)
- கோதுமை மாவு (WHEAT FLOUR)
- உப்பு (SALT)
- சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் (REFINED SUNFLOWER OIL)
- சீரகம் (CUMIN)
- பச்சை மிளகாய் (DEHYDRATED GREEN CHILLI)
- பெருங்காயம் (ASFOETIDA)
தேவையான பொருட்கள்:
தண்ணீர் 1.2 (1200 ml) லிட்டர் மட்டும்.
செய்முறை:
- இந்த பாக்கெட்டில் உள்ளவற்றை 1.2 லிட்டர் தண்ணீரில் ஒரே சீராக கலக்கவும்.
- கரைத்த மாவை 5 நிமிடங்கள் அப்படியே விடவும்.
- சூடான தவாவில் எண்ணைய் தடவி, ஒரு சிறிய கப் மாவை எடுத்து தவா மீது வார்க்கவும்.
- ஒரு ஸ்பூன் நெய் அல்லது எண்ணையை ஊற்றிய மாவின் மீதும் அதை சுற்றியும் விடவும்.
- பொன்னிறமாக மாறும் வரை மிதமான தீயில் வேக விடவும்.
- பின்பு மேலே கூறியவற்றை மீண்டும் செய்யவும்.
உங்களது பணம், நேரம் இவற்றை சேமித்து, ஆரோக்கியத்தை பெற்று சட்டினியுடன் அன்பையும் கலந்து பரிமாறவும்.

No comments:
Post a Comment